அன்பு ரத்த சொந்தங்களுக்கு பணிவான வணக்கங்கள்.
உங்கள் அனைவருக்கும் என்னுடைய 2021 ம் ஆண்டின் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இந்த புத்தாண்டை நாம் இரட்டிப்பு மகிழ்ச்சியுடன் துவங்குகிறோம் ௭ன்பதில் பெரு மகிழ்ச்சி கொள்கிறேன்.
ஆம் முதலாவது மகிழ்ச்சி கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்கள் இணைந்து 03.01.2021 அன்று விழா குழு தலைவர் மற்றும் கோவை மாவட்ட TNRBA தலைவர் மற்றும் தமிழ் நாடு மாநில உப தலைவர் திரு.சுரேஷ் பாபு சிங் தலைமையில் கோவையில் சீரிய முறையிலும் சிறப்பான முறையிலும் நடத்தும் நம் சங்கத்தின் குடும்ப விழா அதற்க்காக ஏற்பாட்டாளர்கள், பங்களிப்பாளர்கள் மற்றும் துணை நின்ற அனைத்து உறவுகளுக்கும் எனது கோடானு கோடி நன்றியினை தெரிவித்து கொள்கிறேன்.
இரண்டாவது மகிழ்ச்சி நமது சங்கத்திற்க்காக புதிதாக துவங்கியிருக்கும் டேட்டா பேஷுடன் இணைக்க பட்ட இணயதளம் வாயிலாக உங்களிடம் வாழ்த்து கூறுவதற்க்கு மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.
இம் முயற்சி நமது சங்கத்தை அடுத்த கட்ட வளர்ச்சி நிலைக்கு கொண்டு செல்லும் என்று உறுதியாக நம்புகிறேன்.இந்த முயற்சிக்கு ஆலோசனை வழங்கியது மட்டுமில்லாது உருவாக்கம், முதலீடு, செயல்படுத்தல் போன்ற பணிகளை அல்லும் பகலும் அயராது உழைத்து முடித்த சென்னை, மணப்பாக்கத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற பொறியாளர் திரு.ஜெ.பிரகாஷ் சிங் அவர்களுக்கு எனது சார்பாகவும், நமது சங்கத்தின் சார்பாகவும், நமது ரத்த சொந்தங்கள் சார்பாகவும் வாழ்த்துக்களையும், நன்றிகளையும் காணிக்கை ஆக்கிக்கொள்கிறேன்.
கடந்த 2020 ம் ஆண்டு நமது சங்கம் பல்வேறு சாதனைகளை செய்து நிகழ்த்தியது என்பதனை இந்த தருணத்தில் நினைவூட்ட விரும்புகிறேன் குறிப்பாக,
1). ராஜா தேசிங் – ராணிபாய் அவர்களின் 306 வது நினைவு தினத்தை முன்னிட்டு 09.10.2020 அன்று ராணிப்பேட்டையில் ராணிபாய் நினைவிடத்தில் புஷ்ப அலங்காரம் செய்து நமது ரத்த சொந்தகள் இணைந்து முதல் முறையாக ஒரு பெரிய விழா நடத்தினோம் அன்றே ரத்த தான முகாமும் நடத்தினோம்.
2). நமது சங்கத்தின் பொன்விழாவை முன்னிட்டு 12.01.2020 அன்று ஓசூரில் குடும்ப சந்திப்பு கூட்டத்தை, இலவச கல்யாண கேந்திராவுடன் சிறப்பான முறையில் கொண்டாடினோம். நமது மாநிலம் மட்டுமின்றி பல்வேறு மாநில நமது சமுதாய தலைவர்களை அழைத்து வந்து சிறப்புரை ஆற்ற செய்தோம்.
இந்த புத்தாண்டில், நம் சமுதாய வளர்ச்சிக்கு மேன்மேலும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அதற்கு தங்கள் அனைவரது பேராதரவையும், ஒத்துழைப்பையும் வேண்டுகிறேன்.
இப்படிக்கு,
அன்பு சகோதரன்
Dr.G.பவானி சிங்
தலைவர்- தமிழ்நாடு ராஜ்புத் பொந்தில் சங்கம்.
Date:01.01.2021
Warm Greetings to all my Dear Ones !!
HAPPY NEW YEAR 2021 wishes to all of you. I am so proud that, we are beginning this New Year with double happiness.
Yes, the first Happiness is the FAMILY MEET GATHERING FUNCTION of our association being held in Coimbatore on 03.01.2021, which is jointly organized by Coimbatore, Erode and Tiruppur District Committees under the leadership of SHRI.SURESH BABU SINGH – Chairman of Festival Committee, Covai District President and also the State Vice President of TNRBA, in a zealous and excellent manner. I would like to express my gratitude to the organizers, contributors and all the associates who stood by it.
The second pleasure is launching of new Database driven WEBSITE for our Tamil Nadu Rajput Bondil Association. It gives me immense pleasure to greet you all through this new website.
I firmly believe that, this technological initiative will take our association to the second stage of our community development. On behalf of Myself, our TNRBA Association and all our blood relations, I would like to extend my congratulations and thanks to SHRI.J. PRAKASH SINGH, a retired Senior Engineer from L&T Manappakkam, Chennai, who not only drive this initiative but also involved, owned and completed the tasks of TNRBA Website creation, investment and finally successful launching through his sincere efforts and hard works.
At this juncture, I would like to remind you that, our association has made remarkable achievements in the year 2020, particularly…
1). On the eve of Raja Desingh – Queen Rani Bai’s 306th Remembrance Day, on 09.10.2020 the Ranipet memorial place was decorated with flowers and all our community members gathered together and organized a grant function at Ranipet first time. Blood donation camp also organized there on the same day.
2). On the eve of the Golden Jubilee of our Association, we have celebrated the Family Meet Gathering Function at Hosur on 12.01.2020 in a special way along with free Wedding Kendra. We brought in not only our state but also our community leaders from different states and made it special.
I assure you of taking further more steps in the coming year for the betterment of our community and seeking all your support and cooperation.
Yours Loving Brother,
Dr.G. Bhavani Singh
President – Tamil Nadu Rajput Bondil Association